மாத்தறையில் துப்பாக்கிச் சூடு : தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த இருவர் பலி! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, 22 March 2025

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு : தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த இருவர் பலி!

Responsive Ads Here
.com/img/a/


மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோவிலுக்கு தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.


குறித்த சம்பவம் நேற்று (21.03.2025) இரவு 11:45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள தெவுந்தர கபுகம்புர பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, அதன் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று​ தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த துப்பாக்கிச் சூட்டில் தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.


துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நீதவான் விசாரணை, மாத்தறை மேலதிக நீதவான் மாலன் சிரான் ஜயசூரிய அவர்களால் இன்று (22) அதிகாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகினர்.

25-67de14ebbf6c2


No comments:

Post a Comment

Post Top Ad