பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, 22 March 2025

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

Responsive Ads Here



25-67dca09d8b69f


மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


இதனடிப்படையில், மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad