சடுதியாக குறைவடைந்த தங்க விலையானது அதிகரித்த நிலையில்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 18 September 2024

சடுதியாக குறைவடைந்த தங்க விலையானது அதிகரித்த நிலையில்!



இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்க விலையானது அதிகரித்த நிலையில் இன்று (18.09.2024) மீண்டும் அதிகரித்துள்ளது.


இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 776,447 ரூபாவாக காணப்படுகின்றது.


அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,390 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 219,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,110 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.


21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,970 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 191,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 209,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 193,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here