எரிபொருள் விலைக் குறைப்பு - ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, 30 September 2024

எரிபொருள் விலைக் குறைப்பு - ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் வெளியிட்ட அறிவிப்பு!

Responsive Ads Here

.com/img/a/

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (Ceylon Petroleum Corporation) விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் (IOC) அறிவித்துள்ளது.


அதேநேரம் சினோபெக் (Sinopec) நிறுவனமும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.


இன்று (1.10.2024) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தும் வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்படி 332 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும். அதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.


மேலும், 307 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாயாகும். 352 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.


202 ரூபாவாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாய் என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில் எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.


பெரும்பாலும் எரிபொருளின் விலை குறைக்கப்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.


கடந்த மாத விலைச்சூத்திரத்தின்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 332 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.


அத்துடன், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 377 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதேவேளை இந்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. a

No comments:

Post a Comment

Post Top Ad