ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake )கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விஜயமானது இன்று திங்கட்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று காலை (23) ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அவரது பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.
அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்க மகாநாயக்க தேரர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், இலங்கையின் முப்படைகளின் தளபதிகளுடனும் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment