பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (University Grants Commission) தவிசாளர் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அரச பல்கலைக்கழகங்களின் கீழ் அடங்காத தனியார் பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவகங்களும் தமது பணியாட்குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதை இயலச் செய்யும் வகையில் விடுமுறை வழங்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச மற்றும் தனியார் துறைகளில் சம்பளம் மற்றும் சொந்த விடுமுறையினை இழக்காத வகையில் வாக்கினை அளிப்பதற்குச் சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காவிடின் அது அடிப்படை உரிமை மீறலாகக் கருதப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) ஆணையாளர் நாயகம் நேற்று ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment