இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 18 September 2024

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

நாட்டில் தென் மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (18.09.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி (Kandy) மற்றும் நுவரெலியா (Nuwereliya) மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


மத்திய மலைநாடுகளின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-45)கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here