இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 16 July 2024

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு!



இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மற்றும் நடத்துனர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 370 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தலைமையில் இடம்பெற்றுள்ளது.


குறித்த நிகழ்வானது, கொழும்பு சம்புத்தத்வ ஜயந்தி மந்திர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


குறிப்பாக மேல்மாகாண டிப்போக்களில் உள்ள சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


அதன் போது, மேல்மாகாணத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து நீண்டகாலமாக விண்ணப்பித்துள்ள சாரதிகள் மற்றும் நடத்துனர்களை இடமாற்றம் செய்வதற்கு இந்த புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.


இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மேல்மாகாணத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட டிப்போவில் மூன்று வருடங்கள் கடமையாற்ற வேண்டும் எனவும் எந்தவொரு அரசியல் செல்வாக்கினாலும் மாற்றம் செய்யப்பட மாட்டாது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here