விடுமுறையில் வீடு செல்லக் காத்திருப்போருக்கு நற்செய்தி! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 9 April 2024

விடுமுறையில் வீடு செல்லக் காத்திருப்போருக்கு நற்செய்தி!


புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சிங்கள, தமிழ் புத்தாண்டு தொடங்கும் இந்த வாரம் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் பலர் கிராமங்களுக்கு செல்ல தயாராக உள்ளதால் அவர்களுக்காக இம்முறையும் விசேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் செயற்படுத்தப்படுகின்றன.


இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை 1,400 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.


மேலும், கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக 12 சிறப்பு தொடருந்துகளை இயக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.


அத்தோடு, இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து), தநந்தன இண்டிபோலகே, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பதுளைக்கு இரண்டு விசேட புகையிரதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அதன்படி, பெலியத்தவிலிருந்து மருதானை வரையிலும், சாஹா காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் 4 விசேட புகையிரதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு மேலதிக தொடருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேவேளை, ஏப்ரல் 13ஆம் திகதிக்கு பின்னர் கொழும்புக்கு வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here