இந்திய பெரிய வெங்காயம் விரைவில் இலங்கைக்கு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 8 April 2024

இந்திய பெரிய வெங்காயம் விரைவில் இலங்கைக்கு!


இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


மோடி அரசின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மாலைத்தீவுக்கு அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்த நிலையில், அதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைக்கவும் நோக்கமாக கொண்டு  இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.


எனினும் தற்போது இலங்கைக்கு பெரிய வெங்காயத்தினை ஏற்றுமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here