பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் நிறை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் முள்ளந்தண்டு உள்ளிட்ட பல பிரச்சினைகளை குறைப்பதற்கு பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை பகுதிகளாக அச்சிடுவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செயல்நூல்கள் தவிர்ந்த ஏனைய பாடப்புத்தங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைப்பதற்கு அதிபரின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் குறித்த சுற்றிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் அதிக எடை காரணமாக மாணவர்களுக்கு எற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் சுகாதார துறையின் ஆலோசனைகள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் தொடர்பில், எமது செய்திச் சேவை முன்னதாக தகவல் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment