மசாஜ் நிலைய பெண்ணை கடத்திய காவல்துறை உத்தியோகஸ்தர்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 25 March 2024

மசாஜ் நிலைய பெண்ணை கடத்திய காவல்துறை உத்தியோகஸ்தர்!



குருவிட்ட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் காணப்பட்ட பெண் ஒருவரை பலாத்காரமாக கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் காவல்துறை புலனாய்வு பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் இடம்பெற்றபோது சந்தேக நபருடன் காணப்பட்ட மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் சிரிபாகல காவல் நிலையத்தில் கடமையாற்றுபவர்களாவர்.


பிரதான சந்தேக நபர் இரத்தினபுரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


இதேவேளை, பிரதான சந்தேக நபரான காவல்துறை கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here