உடல் எடையை குறைக்க பல்வேறு தரப்பினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு உடல் எடையை குறைக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் டயட் முறைதான் Intermittent Fasting.
இந்த நடைமுறையின்படி ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 16 மணி நேரத்தை சாப்பிடாமல் பட்டினியாக இருந்துவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டுமே தினசரி சாப்பாடை சாப்பிடுவது.
இவ்வாறான டயட் முறையால் உடல் பருமன் குறைவதாக பலரும் சொல்வதால் இதை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ள நிலையில் இந்த டயட் முறை குறித்து ஆய்வு செய்த தி அமெரிக்கன் இதய கூட்டமைப்பு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
அதன்படி இதுபோன்ற Intermittent Fasting முறையில் டயட் மேற்கொள்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து 91% அதிகம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இந்த டயட் முறையை மேற்கொள்பவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment