காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: இன்றைய வானிலை முன்னறிவிப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 24 March 2024

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: இன்றைய வானிலை முன்னறிவிப்பு!



கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


அத்தோடு, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதேவேளை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழச்சி பதிவாகும் என எதிர்பார்க்கபடுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.


மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.     

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here