60 வயதில் உலக சாதனை புரிந்த யாழ் தமிழன்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 25 March 2024

60 வயதில் உலக சாதனை புரிந்த யாழ் தமிழன்!



தனது தாடியாலும் தலை முடியினாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து ஒருவர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் என்பவரே இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


நேற்றைய தினம் (24) காலை 10.00 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது.


அதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய ஏஷ் பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரத்துக்கு தாடியாலும், மிகுதி 500 மீற்றர் தூரம் வரை தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் சாதனை படைத்துள்ளார்.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உலக சாதனை புத்தக நிறுவனப் பிரதிநிதிகள் இந்த சாதனை நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.   

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here