ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹலவத்தை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால், புத்தளம் - ஹலவத்தை வீதியின் லுனு ஓயா பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டவர் புத்தளம் பகுதியிலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த ஆசிரியரிடம் இருந்து 90மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment