கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்திற்கு இடையூறு விளைவித்த காவல்துறையினரின் அடாவடியை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக போராட்டத்தில் கலந்து கொண்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment