கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 15 February 2024

கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

 


 கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கிகளை (இடியன்) மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று (14.02.2024) முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரண்டு இடியன் துப்பாக்கிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்குக் குழாய்கள் 03, கட்டுத் துவக்குக்கு பயன்படுத்தப்படும் கம்பி, ஈயக்குண்டுகள் 12, யானை வெடிமருந்து 3 ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (15.02.2024) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here