கண்டி மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 28 February 2024

கண்டி மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

 



இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமியின் தீவிர முயற்சியால் மேற்படி பகுதியில் வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அனைவருக்கும் சுத்தமான மற்றும் சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்காக காத்திரமான நடவடிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்து வருகின்றார்.


அரச மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன் மக்களுக்கு சிறந்த முறையில் குடிநீரை பெற்றுத்தர நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.


பல்லேகம குடிநீர் திட்டம் ஊடாக 450இற்கு அதிகமான குடும்பங்களுக்கும், பள்ளிவாசல் மற்றும் பாடசாலை உள்ளடங்களாக அனைவருக்கும் பயன்பெறமுடியும்.


இப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான குடிநீர் தேவையை எனது வேண்டுகோளுக்கு அமைவாக குவைத் நாட்டின் தனியார் நிறுவனமொன்றின் ஊடாக பத்து மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.


என்னுடைய கோரிக்கைக்கு அமைவாக வேலைத்திட்டத்தை நிறைவுப்படுத்திக் கொடுத்த குவைத் தனியார் நிறுவனத்திறகும் அதன் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்னும் பல வேலை திட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்நிகழ்வில் குறித்த தனியார் நிறுவனத்தின் தலைவர், அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, பலேகம பள்ளிவாசல் தலைவர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here