வெப்பமான காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 27 February 2024

வெப்பமான காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!



இலங்கையில் தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.



அத்துடன் நாளை (28.2.2024) கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த எச்சரிக்கையானது இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ளது.


மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை நாளை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை குருணாகலில் நேற்று (26) அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.


மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், கடும் வெயிலைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.


மேலும் வெப்பமான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here