அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு ! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 15 February 2024

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு !

புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்  கலந்து கொண்ட  சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12 வகையான  உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், சிவப்பு கௌபி ஒரு கிலோ கிராம் 55 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1095 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராம் 50 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1200 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் ஒரு கிலோ கிராம் 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

டின் மீன் 425 கிராம் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 575 ரூபாவாகும்.

காய்ந்த மிளகாய் ஒரு கிலோ கிராம் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1210 ரூபாவாகும்.

பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.

வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 13 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 275 ரூபாவாகும்.

உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் 11 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.

சிவப்பரிசி ஒரு கிலோ கிராம் 06 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 174 ரூபாவாகும்.


டின் மீன் 155 கிராம் 05 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 290 ரூபாவாகும்.

பாஸ்மதி அரிசி ஒரு கிலோ கிராம் 05 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 760 ரூபாவாகும்.

நிலக்கடலை ஒரு கிலோ கிராம் 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1300 ரூபாவாகும்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here