7 வயது சிறுமியை திருட்டுக்குப் பயன்படுத்திய தாய்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 28 February 2024

7 வயது சிறுமியை திருட்டுக்குப் பயன்படுத்திய தாய்!


கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களது பெற்றோரின் கையடக்கத் தொலைபேசிகளை 7 வயது சிறுமியை வைத்து திருடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.


விசாரணையில் கையடக்கத் தொலைபேசிகளை திருடி தாயிடம் கொடுக்காவிட்டால் தனது தாய் தன்னை தாக்குவதாகவும் திருடிய கையடக்கத் தொலைபேசிகளை தனது தாய், தந்தையிடம் கொடுப்பதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ஒன்றின் தாயின் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.


இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபான தாய் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here