நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், 1,133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 54 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், போதைப்பொருட்களுக்கு அடிமையான 38 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில், 405 கிராம் 34 மில்லிகிராம் ஹெரோயின், 27, 868 கஞ்சா செடிகள் மற்றும் 1,946 போதைமாத்திரைகள் என்பவற்றுடன் பல்வேறு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மோப்ப நாயின் உதவியுடன் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மல்லாகம் பகுதியில் காவல்துறையினரால் நேற்று விசேட சோதனை நடத்தப்பட்ட போது, யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment