காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று திங்கட்கிழமை (11) குறித்த மாணவனை காவல்துறையினர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, யாழ் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்யும் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட போதைப் பொருள் சிறிய சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(ஆதிரா)
No comments:
Post a Comment