சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட மேல் மாகாண ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு 12, வாழைத்தோட்டம் , சில்வர் ஸ்மித் லேனைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31,750 பாலியல் ஊக்க மருந்து மாத்திரைகளும், 259 பாலின ஊக்கி ஜெல் பாக்கெட்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், வேறு ஒருவருக்குக் கைமாற்றும் வரை இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இவை இந்தியாவில் இருந்து மீன்பிடி படகுகளில் மறைத்து வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment