சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்: பெற்றோர் சந்தேகம்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 1 December 2023

சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்: பெற்றோர் சந்தேகம்!

 

மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.


இதன்போது மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவாடிய குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் 17 ஆம் திகதி கல்முனை சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சிறுவன் புதன்கிழமை (29.11.2023) அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து விட்டதாக சிறுவனின் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகனின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும்  தந்தை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


தற்போது சிறுவனின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவனுடைய மரணம் தொடர்பான விசாரணைகளையும், சட்ட வைத்திய அறிக்கையையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், தனது மகனின் மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.


வறுமை கோட்டின் கீழ் வாழும் தங்களது பிள்ளைக்கு நடந்த கொடுமை யாருக்கும் இடம்பெறக்கூடாது என்றும், தங்களது பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


(ஆதீரா)


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here