மத்தளையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் 30 வருடங்களுக்கு தனியார் முதலீட்டாளருக்கு வழங்கப்படவுள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தை குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் இறுதி செய்யப்படும் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (08.12.2023) தெரிவித்துள்ளார்.
தனியார் யார் என்ற விடயத்தை அமைச்சர் குறிப்பிடவில்லை.
இதேவேளை விமான எரிபொருளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனமான வரையறுக்கப்பட்ட Cannel நிறுவனம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சேமிப்பக வசதியை விரைவில் நிர்மாணிக்க உள்ளதாகவும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றின் மூலமே இந்த முதலீட்டாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் விமான எரிபொருள் விநியோகத்தை தாராளமயமாக்கும் அரசாங்கக் கொள்கைக்கு இணங்க ஏலம் கோரப்பட்டது என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment