கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறந்து விட்டு சென்ற பயணப் பொதியில் 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் இருந்ததை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளது.
கனடாவில் இருந்து கடந்த நவம்பர் 14 ஆம் திகதி பிற்பகல் 02.40 மணியளவில் டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பான தகவல் மேல்மாகாண புலனாய்வு தகவல் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்களும் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்த பயணப் பொதிகளில் 19 கிலோ 588 கிராம் குஷ் போதை பொருள் இருந்ததாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த குஷ் போதை பொருள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment