எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் VAT 18% ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அது நேரடியாக எரிபொருளை பாதிப்பதால் மின்சார கட்டணமும் அதிகரிக்கும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்க்கும் தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சென்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மின்சாரம் தயாரிக்க டீசல் ஒரு ரூபாய் கூட செலவாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் அதன் பலன் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment