தந்தையால் மகளுக்கு நேர்ந்த கதி : இராணுவ ஊழியர் ஒருவர் கைது! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 2 December 2023

தந்தையால் மகளுக்கு நேர்ந்த கதி : இராணுவ ஊழியர் ஒருவர் கைது!

 



தனது மகளை தகாத முறையில் நடத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்த கைது நடவடிக்கை கொபேகனே பொலிஸாரால் நேற்று (01.12.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.



சந்தேகநபர் சுமார் 02 வருடங்களாக 12 வயது மகளை தகாத முறையில் நடத்தியதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்திருந்தது.



இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



சந்தேகநபர் வவுனியா பம்பைமடு 17 ஆவது காலாட்படை முகாமில் ஊழியராக பணிபுரிவது தெரியவந்துள்ளது.



பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நிகவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சந்தேகநபர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.     

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here