இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
இந்தியாவின் - மும்பை பகுதியில் விராட் கோலியின் உணவகம் காணப்படுகின்றது.
இந்த உணவகத்திற்கு தமிழ் கலாச்சார முறைப்படி சென்ற தமிழருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மதுரையை சேர்ந்த ராவண ராம் என்ற பாடகர் சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பதிவு செய்து பிரபல்யமானவர்.
இவர் மும்பையில் உள்ள விராட் கோலியின் உணவகத்திற்க்கு சாப்பிடுவதற்காக வேட்டி சட்டையில் சென்றுள்ளார்.
இந்த உணவகத்தில் வேட்டி சட்டை அணிந்து செல்ல அனுமதி இல்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் அந்த உணவகத்திற்க்கு முன் நின்று தனக்கு நடந்த காரணத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
இது சர்ச்சைக்குரிய செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment