மாரவில - மூகுதுகடுவ கடலில் குளிப்பதற்காகச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்களில் ஒருவர் அலையில் சிக்கிய நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (27) மாலை குறித்த கடலில் நான்கு மாணவர்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் , மாணவர்கள் நால்வரும் குளித்துக் கொண்டிருந்த போது அந்த நால்வரும் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீனவர்கள் மற்றும் சிலர் இணைந்து அவர்களில் மூவரைக் காப்பாற்றிய போதிலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாரவில தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாத்தாண்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் நான்கு மாணவர்கள் குளிப்பதற்கு மாரவில மூதுகடுவ கடற்கரைக்கு வந்ததாகவும், பின்னர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட பாரிய அலையினால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், அலையில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்களில் மூவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்த போதிலும், ஒரு மாணவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
காணாமல் போன மாணவனைத் தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment