இலங்கை சந்தையில் கறுவாவின் விலை பாரிய அளவில் குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக கறுவாவின் விலை குறைந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விவசாயத் திணைக்களம் விலை வீழ்ச்சி தொடர்பில் தெரிவிக்கையில்,
இலங்கை கறுவா சந்தையில் கிடைக்கும் மிக உயர்ந்த தர அல்பா கறுவாப் பட்டை ஒரு கிலோகிராம் 4,800 ரூபா முதல் 5,000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது உயர்ந்த தர அல்பா கறுவாப் பட்டை சந்தையில் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கறுவா செய்கையை பிரதான வாழ்வாதாரமாக கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கட்டுவன மற்றும் வலஸ்முல்ல பிரதேச மக்கள் பெரும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment