பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 107 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 1 கிலோ 104 கிராம் போதைப்பொருட்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றம், அந்த போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 09 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
நாளை (14) காலை புத்தளம் பாலாவி பகுதியில் வழக்குப் பொருட்கள் எரிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment