துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமான பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய இவர் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கு விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment