பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வனாடு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஓசியானியாப்
குறித்த நிலநடுக்கம் நேற்று(07.12.2023) பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வனாடுவின் தெற்கே 7.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில், இசங்கல் நகரத்திலிருந்து 123 கிலோமீட்டர் தெற்கிலும், தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 338 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கத்தின் எதிரொலியால் வனாடு மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி உருவாக சாத்தியக்கூறு உள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment