ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 2 December 2023

ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு!

 



ஓய்வூதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு ஜனவரி முதல் வழங்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.



தெரணியகலை நகரில் இன்று (02.12.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,



ஓய்வுபெற்றவர்களின் நலன்புரி மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.



எனவே, குறித்த சம்பள முரண்பாடுகளை தீர்க்க, 2500 ரூபாய் அதிகரிப்பானது ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு உள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here