தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பல்வேறு அநாகரீகமான பிரச்சினைகளை கருத்திற் கொண்டு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் பயணிகள் தமது முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் 'வோக்கி டோக்கி' அலைபேசி முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளது.
பயணிகளின் வசதிக்காக இரண்டு வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து தனியார் பேருந்துகளிலும் குளோபல் பொசிஸினிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) பொருத்தப்பட உள்ளது.
இந்தநிலையில் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக உணரும் பயணிகள் பேருந்துக்குள் பொருத்தப்பட்டுள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது தேசிய போக்குவரத்து ஆணையத்தில் தங்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.
இது துன்புறுத்தல்கள், திருட்டுகள், வேகம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், நடத்துனர்கள் மற்றும் சாரதிகளின் தவறான நடத்தை மற்றும் பேருந்துகளில் நடக்கும் பல்வேறு சட்டவிரோத செயல்களைக் குறைக்க உதவும்.
அத்துடன் பயணிகளுக்கு சுதந்திரமான பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை இது கொடுக்கும் என்றும் கெமுன விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment