தனியார் பல்கலைக்கழக மாணவன் கடத்தல்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 6 December 2023

தனியார் பல்கலைக்கழக மாணவன் கடத்தல்!

 



கடத்தப்பட்ட தனியார் பல்கலைக்கழக மாணவர் மற்றும் அவரது சொகுசு காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.



களுபோவில ஆசிரி மாவத்தையில் வசிக்கும் 18 வயதுடைய மாணவர் ஒருவரே கடத்தப்பட்டுள்ளார்.



சம்பவம் தொடர்பில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.



கடந்த 4ஆம் திகதி வெளிநாட்டுக்குச் செல்லும் தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய நிலையில், தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்த போதே மாணவர் கடத்தப்பட்டுள்ளார்.



தெஹிவளை மாநகர சபைக்கு அருகாமையில் வீதியைக் கடந்த வேன் ஒன்று மாணவனையும் அவர் பயணித்த சொகுசு காரையும் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அவரை வேனில் ஏற்றி களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு அருகில் வேனை நிறுத்திவிட்டு மீண்டும் மாணவரை அவர் பயணித்த காரில் ஏற்றி மாத்தளை பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.



அங்கு சந்தேகநபர்கள் மாணவனை அச்சுறுத்தி திஹாரி பிரதேசத்தில் உள்ள அவரது தந்தைக்கு சொந்தமான காணியை தமக்கு பதிவு செய்து தருமாறு அச்சுறுத்தியுள்ளனர்.



இது தொடர்பில் மாணவன் தனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததையடுத்து குறித்த தாய் சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.



பின்னர் உடனடியாக செயற்பட்ட  கொஹுவளை பொலிஸ் அதிகாரிகள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரின் தந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.



பின்னர் அவர் ஊடாக கடத்தலில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு சூட்சுமமாக அழைப்பெடுத்து கொஹுவல பகுதிக்கு அழைத்து வந்து கைது செய்யப்பட்டனர்.



கடத்தப்பட்ட மாணவனின் தந்தைக்கும் பல வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட குழுவின் பிரதான சந்தேகநபரின் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட நிதித் தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here