நால்வர் கொண்ட குடும்பம் அடுத்த வருடம் செலுத்த வேண்டிய வட் வரி தொடர்பில் வெளியான தகவல் - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 17 December 2023

நால்வர் கொண்ட குடும்பம் அடுத்த வருடம் செலுத்த வேண்டிய வட் வரி தொடர்பில் வெளியான தகவல்

 




இவ்வருடத்துடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய வட் வரி தொகையானது பெரும் அதிகரிப்பை கொண்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.




அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9941 ரூபாவை வட் வரியாக செலுத்தி வருகின்றது.




2024ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20467 ரூபாவை வட் வரி செலுத்த வேண்டும்.




இதன்படி இவ்வருடத்துடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய வட் வரி தொகையானது 105 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here