மதுபானங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மீதான வரிகளை அதிகரிக்குமாறு உலக நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குறித்த வரி அதிகரிப்பினால் ஆரோக்கியமற்ற பொருட்கள் மீதான சராசரி உலகளாவிய வரி விகிதம் குறைவடைவதுடன் ஆரோக்கியமான மக்கள் தொகைக்கு வழிவகுக்கும்.
மது அருந்துவதால் ஆண்டுக்கு 26 இலட்சம் மக்கள் இறப்பதுடன் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதால் 80 இலட்சத்துக்கு அதிகமானோர் இறக்கின்றனர்.
மதுபானங்கள், இனிப்பு பானங்கள் மீதான வரியை நடைமுறைப்படுத்துவது இந்த இறப்புகளின் வீதத்தை குறைக்கும்.
.வரி விதிக்கும் செயற்பாட்டினால் குறித்த தயாரிப்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான தயாரிப்புகளை உருவாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும்.
ஆரோக்கியமற்ற பொருட்களுக்கு வரி விதிப்பது ஆரோக்கியமான மக்களை உருவாக்குகிறது.
மதுபானத்திற்கு வரி விதிப்பதனால் வன்முறை மற்றும் வீதி போக்குவரத்து பாதிப்புகளைத் தடுக்க உதவுவதுடன் மதுபானங்கள் தொடர்ந்து மலிவு விலையில் விநியோகிப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment