இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் 27 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 703 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் இருந்து 27 ஆயிரத்து 281 பேரும், ரஷ்யாவில் இருந்து 22 ஆயிரத்து 382 பேரும், ஜேர்மனியில் இருந்து 11 ஆயிரத்து 680 பேரும் மற்றையவர்கள் ஏனைய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 12 இலட்சத்து 63 ஆயிரத்து 158 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
(ஆதீரா)
No comments:
Post a Comment