அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அதன் பின்னர் மாகாண சபை தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகத்தமிழர் பேரவை பிரதிநிதிகள் உடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் நடத்தப்பட்டதன் பின்னர் அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment