அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நகரில் அமைக்கப்பட்டிருந்த தன்னியக்க பணம் பெறும் (ATM) இயந்திரத்திலிருந்து பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (12.12.2023) இடம்பெற்றுள்ளது.
இயந்திரம் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கமராக்கள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பதிவான சில காட்சிகளின் அடிப்படையில் 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இயந்திரத்தின் பாதுகாப்பு அறையின் கதவு உடைக்கப்பட்ட போதிலும் எந்தவித பணமும் திருடப்படவில்லை என அக்கரபத்தினை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment