டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், சால்வெளி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திர சரூரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கடந்த வாரத்தில் டெங்கு நோயினால் மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், தாவடி பகுதியைச் சேர்ந்த மதுரன் கிருதிஷ் என்ற 11 மாத ஆண் குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தது.
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி பயின்ற குணரத்தினம் சுபீன் என்ற மாணவனும் கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
டிசெம்பர் மாதத்தில் மாத்திரம் சுமார் 1,000 டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மட்டும் 71 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய டெங்கு நோயாளர்கள் யாழ். மாவட்டத்தில் அதிகளவானோர் பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment