மின் கட்டணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு நற்செய்தி! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 7 December 2023

மின் கட்டணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு நற்செய்தி!




ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். 13 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கும் நாடாக இருந்தது. எரிபொருட்களில் சிக்கல் ஏற்பட்டது.


அத்தியாவசிய மருந்துகளில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது நாடு படிப்படியாக நிலைபெற்று வருகிறது.


ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையும் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here