அஸ்வெசும எனும் நலன்புரித் திட்டத்தின் கடந்த ஒக்டோபர் மாதத்துக்கான 8 ஆயிரத்து 775 மில்லியன் ரூபாய் உரிய குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர், ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்ட தொகை நாளை அவர்களின் கணக்குகளுக்கு சென்றடையுமெனவும் அவர் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 14 லட்சத்து 6 ஆயிரத்து தொள்ளாயிரத்து 32 குடும்பங்களுக்கு குறித்த தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நலன்புரித் திட்டம் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் ஆராயப்பட்டதன் பின்னர், தகுதியானவர்களுக்கு குறித்த நிதி உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment