யாழ்ப்பாணத்தில் பதுக்கப்படும் சீனி! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 13 December 2023

யாழ்ப்பாணத்தில் பதுக்கப்படும் சீனி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,


வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.


சீனியின் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனி தனியார் இறக்குமதியாளர்களிடம் இருப்பதாகவும் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சீனி பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் -என்றார்.


(ஆதிரா)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here