இலங்கை மத்திய வங்கியானது பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், எந்தவொரு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் சேவைகளுக்காக அந்த நிறுவனங்களினால் வழங்கப்படும் ஒப்பந்த நிபந்தனைகளை நன்கு அறிந்து கையொப்பமிடுமாறு இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் சுஜிதா ஜெகஜீவன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை (02/12/2023) ஊடக நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“சில நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒப்பந்தங்களை நன்கு அறியாமல், அதற்கு சிலர் ஒப்புதலை வழங்குகின்றனர்.
ஆகையால் எந்தவொரு நிதி நிறுவனங்களின் ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு முன்னர் ஒப்பந்தங்களை அறிந்துக்கொள்ள வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment