பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 11 December 2023

பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டார்.


பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேக நபர் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு  யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


யாழ்ப்பாணம் - பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகிலேயே 33 வயதான குறித்த சந்தேக நபர் மாவா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைதுசெய்யப்பட்டார்.


இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் சிறிய சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.


சந்தேக நபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.


(ஆதிரா)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here